Skip to content
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்Minnesota Tamil Sangam · est. 2003

World Mother Language Day Celebration — 2010

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் — 2010

The Minnesota Tamil Sangam and the MNTS Tamil School jointly organized their 14th annual World Mother Language Day celebration — a children's speech contest, a Tamil project showcase by Tamil School students, and adult essay and poetry competitions, all conducted successfully.

← Back to World Mother Language Day

2026 World Mother Language Day celebration flyer
2026 World Mother Language Day celebration flyer.

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

மினசோட்டாத் தமிழ்ச்சங்கம், மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி இணைந்து நடத்திய 14ஆம் ஆண்டு உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டத்தில் சிறுவர்களின் பேச்சுப்போட்டி, தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழை மையமாகக் கொண்ட திட்டக் காட்சிகள், பெரிவர்களுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் அனைத்தும் திறம்பட நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும், வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.👏👏

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பெரியவர்களுக்கான கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகளுக்கு நடுவராக இருந்து நேர்த்தியாகவும் துல்லியமாகவும் படைப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்த வணக்கத்திற்குரிய நடுவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏

முதிர்ந்த தமிழ்ப்பற்றாளர், எழுத்தாளர், கவிஞர், திரு. நீரை அத்திப்பூ ஐயா அவர்கள் தமிழென்று கேட்டால் தயங்காமல் தாராளமாய் தம் உதவியை வாரி வழங்குபவர். பல்வேறு விழாக்களில் நமக்கு கவிதைகளை வழங்கி வாழ்த்தி மகிழ்பவர்.

எழுத்தாளர், கவிஞர், பழமைபேசி ஐயா அவர்கள் தமிழை தட்டச்சில் அச்சிட எடுக்கும் நேரத்தைக் காட்டிலும் அதி வேகமாய் சிந்தித்து படைப்புகளை உருவாக்குபவர். தமிழ்ப்பணி என்றால் சங்கம், ஊர் என்று எந்த பாகுபாடுமின்றி உடனே உதவி செய்பவர்.

கவிஞர், எழுத்தாளர், திரு. காண்டீபன் இராசையா அவர்கள் – அழகிய உணர்வுமிக்க கவிகளின் சொந்தக்காரர், ஒவ்வொரு படைப்பிற்கும் தன் கருத்துகளை மென்மையாக எடுத்துரைத்தவர்.

மற்றும் மினசோட்டாத் தமிழ் பற்றாளர்களான முனைவர் குமார் மல்லிகார்ஜூனன் ஐயா அவர்கள் மற்றும் திரு. சரவணக்குமரன் காசிலிங்கம் அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

பெரியோர் தங்கள் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தவும் தமிழார்வத்தை செழுமைப்படுத்தவும் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு உற்சாகத்துடன் படைப்புகளைத் தரித்து அனுப்பியது பாராட்டுதலுக்குரியது. மினசோட்டா தமிழ் உறவுகளின் கவிதைகள் நயம் பொருந்தியதாகவும், கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரைகளை ஒத்த தரத்தில் இருப்பதாகவும் நடுவர்கள் தங்கள் கருத்துக்களை பதிந்திருக்கிறார்கள். பங்குபெற்ற அனைத்துப் போட்டியாளர்களுக்கும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாக்குகிறோம். வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் செலுத்துகிறோம்.

உடனே கீழ்க்கண்ட இணைப்பில் உங்கள் பெயர்களைப் பதியுங்கள் ! உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.

பெரியவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி:

பதிவு செய்யுங்கள் →

பதிவு முடிவடைந்தது — இந்நிகழ்வு நிறைவுபெற்றது. (Registration closed — this event has concluded.)

அனைவரும் வருக ! 😊💐

Adult essay competition

Writers chose from these themes:

  • Pioneers of regional-language preservation
  • Ancient inscriptions and Tamil heritage
  • The multilingual future of Tamil Nadu
  • Indigenous traditions that value language

Adult poetry competition

Poets wrote on these themes:

  • The antiquity of Tamil
  • Language bonds across generations
  • The emotional and revolutionary power of Tamil

With thanks to our judges

We are grateful to the judges who evaluated the adult essay and poetry submissions:

  • Mr. Neerai Athippoo — poet and author
  • Mr. Pazhamaipesi — writer
  • Mr. Kandipen Irasaiah — poet and author
  • Dr. Kumar Mallikarjunan
  • Mr. Saravana Kumaran Kasilingam

Key details

Event date
February 21 (annual observance)
Registration deadline
February 16, 2026
Competitions
Children's speech · Tamil project showcase · adult essay & poetry
Presented by
Minnesota Tamil Sangam & MNTS Tamil School
Winners of the World Mother Language Day competitions
Winners of the World Mother Language Day competitions.